கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தயானந்தன் என்பவர் தொழில் விஷயமாக 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயுடன் விருத்தாசலம் ரயில்நிலையத்தில் ஏறியுள்ளார்.

திருச்சி ரயில் நிலையத்தில் கீழே இறங்கி அவர் உணவருந்தியபோது ரயில் புறப்பட்டதால் அதிர்ச்சியடைந்தார். அருகில் இருந்த ரயில்வே உதவி மையத்தை நாடி ரயிலில் பணத்தைத் தவறவிட்ட விபரத்தைக் கூறியுள்ளார்.
இதுகுறித்து உடனடியாக கரூர் ரயில் நிலைய ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து முன்பதிவு செய்யப்படாத ரயில் பெட்டிக்கு சென்ற ரயில்வே போலீசார் பணத்தை மீட்டனர். பேருந்தில் கரூர் வந்து சேர்ந்த தயானந்தனிடம் விசாரணைக்கு பின்பு அவர்கள் பணத்தை ஒப்படைத்தனர்.