திருச்சி - தஞ்சாவூர் தடத்தில் பராமரிப்பு பணி காரணமாக நாளை(செப் 16) முதல் அக்டோபர் 5ம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம்.

முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்.

திருச்சியில் இருந்து பகல் 12:10க்கு புறப்படும், 76824 திருச்சி - தஞ்சாவூர் பயணிகள் ரயில் செப் 21/28ம் தேதி ரத்து.

தஞ்சையில் இருந்து பகல் 2:05க்கு புறப்படும், 76827 தஞ்சாவூர் - திருச்சி பயணிகள் ரயில் செப் 21/28ம் தேதி ரத்து.

பகுதி தூரம் மட்டும் செல்லும் ரயில்கள்.


திருச்சியில் இருந்து காலை 10:10க்கு புறப்படும், 76854 திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயில், செப் 16ம் தேதி முதல் அக் 5ம் தேதி வரை தஞ்சாவூர் - காரைக்கால் இடையே ரத்து. மேற்கொண்ட தேதிகளில் திருச்சி - தஞ்சை இடையே மட்டும் இயங்கும்.

காரைக்காலில் இருந்து மாலை 3மணிக்கு புறப்படும், 76853 காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில், செப் 16ம் தேதி முதல் அக் 5ம் தேதி வரை காரைக்கால் - தஞ்சாவூர் இடையே ரத்து. மேற்கொண்ட தேதிகளில் தஞ்சாவூர் - திருச்சி இடையே மட்டும் இயங்கும்.

திருச்சியில் இருந்து காலை 7:15க்கு புறப்படும், 56824 திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில், செப் 26 முதல் 28ம் தேதி வரை ரத்து.

தாமதமாக செல்லும் ரயில்கள்.


16234 திருச்சி - மயிலாடுதுறை விரைவு ரயில், செப் 30ம் தேதி வரை மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு சுமார் 60 நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும். (ஞாயிற்றுக்கிழமை தவிர)

56821 மயிலாடுதுறை - திருநெல்வேலி பயணிகள் ரயில், செப் 30ம் தேதி வரை திருச்சி ரயில் நிலையத்திற்கு சுமார் 45 நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும். (ஞாயிற்றுக்கிழமை தவிர)

56711 காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில், செப் 16ம் தேதி முதல் அக் 5ம் தேதி வரை காரைக்காலில் இருந்து பிற்பகல் 1:50க்கு புறப்படும். மேலும் இந்த ரயில் 45 நிமிடங்கள் தாமதமாக திருச்சி வந்து சேரும்.

56703 திருச்சி - திண்டுக்கல் பயணிகள் ரயில், செப் 16ம் தேதி முதல் அக் 5ம் தேதி வரை திருச்சியில் இருந்து இரவு 7:10க்கு புறப்படும்.

56821 மயிலாடுதுறை - திருநெல்வேலி பயணிகள் ரயில், செப் 26 முதல் 28ம் தேதி வரை மயிலாடுதுறையில் இருந்து பகல் 12:25க்கு புறப்படும். மேலும் இந்த ரயில் திருச்சிக்கு 70 நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும்.

மேற்கொண்ட தகவலை திருச்சி கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

மழையின் காரணமாக பராமரிப்பு பணிகள் ரத்து : திருச்சி - தஞ்சை மார்கத்தில் ரயில்கள் வழக்கம் போல இயங்கும்