திருச்சி கோட்டத்தில் பல்வேறு இடங்களில் நடக்கும் பராமரிப்பு பணி காரணமாக செப் 16ம் தேதி முதல் 30ம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருச்சி கோட்டம் அறிவிப்பு


முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்.

76824/76827 திருச்சி - தஞ்சாவூர் - திருச்சி பயணிகள் ரயில்கள், செப் 21 மற்றும் 28ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

பகுதி தூரம் மட்டும் செல்லும் ரயில்கள்.


76854 திருச்சி - காரைக்கால் பயணிகள் ரயில், செப் 16ம் தேதி முதல் அக் 5ம் தேதி வரை தஞ்சாவூர் - காரைக்கால் இடையே ரத்து.

76853 காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில், செப் 16ம் தேதி முதல் அக் 5ம் தேதி வரை காரைக்கால் - தஞ்சாவூர் இடையே ரத்து.

56824 திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில், செப் 26 முதல் 28ம் தேதி வரை ரத்து.



தாமதமாக செல்லும் ரயில்கள்.

16234 திருச்சி - மயிலாடுதுறை விரைவு ரயில், செப் 30ம் தேதி வரை மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு சுமார் 60 நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும். (ஞாயிற்றுக்கிழமை தவிர)

56821 மயிலாடுதுறை - திருநெல்வேலி பயணிகள் ரயில், செப் 39ம் தேதி வரை திருச்சி ரயில் நிலையத்திற்கு சுமார் 45 நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும். (ஞாயிற்றுக்கிழமை தவிர)

56711 காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில், செப் 16ம் தேதி முதல் அக் 5ம் தேதி வரை காரைக்காலில் இருந்து பிற்பகல் 1:50க்கு புறப்படும். மேலும் இந்த ரயில் 45 நிமிடங்கள் தாமதமாக திருச்சி வந்து சேரும்.

56703 திருச்சி - திண்டுக்கல் பயணிகள் ரயில், செப் 16ம் தேதி முதல் அக் 5ம் தேதி வரை திருச்சியில் இருந்து இரவு 7:10க்கு புறப்படும்.

56821 மயிலாடுதுறை - திருநெல்வேலி பயணிகள் ரயில், செப் 26 முதல் 28ம் தேதி வரை மயிலாடுதுறையில் இருந்து பகல் 12:25க்கு புறப்படும். மேலும் இந்த ரயில் திருச்சிக்கு 70 நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும்.


மேற்கொண்ட தகவலை திருச்சி கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.