தாம்பரம் - திருநெல்வேலி இடையே அக்டோபர் 14, நவம்பர் 1 மற்றும் 8ம் தேதிகளில் திருச்சி, புதுக்கோட்டை, அருப்புக்கோட்டை, சிவகாசி, தென்காசி வழியாக சுவிதா சிறப்பு ரயில்.


82615 தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்

தாம்பரத்தில் இருந்து அக்டோபர் 14, நவம்பர் 1 மற்றும் 8ம் தேதிகளில் மாலை 6மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், பம்பா கோவில் சந்தை, தென்காசி, பாவூர் சத்திரம், கீழ்கடயம், அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சேரன் மகாதேவி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.