சிக்னல் கோளாறு: சென்டிரல் நோக்கி வந்த ரயில் பாதி வழியில் நின்றதால் போக்குவரத்து பாதிப்பு


சிக்னல் கோளாறு காரணமாக சென்னை சென்டிரல் நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரயில் பாதி வழியில் நின்றதால் அவ்வழித்தடத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை சென்டிரல் நோக்கி வந்து கொண்டிருந்த மின்சார ரயில் பட்டாபிராம் ரயில் நிலையத்துக்கு அருகே நடு வழியில் நின்றதால் அந்த வழித்தடத்தில் வந்து கொண்டிருந்த ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.