சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட 11 ரயில் நிலையங்கள், 6 ஆன்மிக தலங்களுக்கு மிரட்டல்

வருகின்ற அக்டோபர் மாதம் நவராத்திரி, தசரா பண்டிகை அதனைத் தொடர்ந்து தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகை களங்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தாக்குதல் நடத்த இருப்பதாக ஜெய்ஷே முகமது தீவிரவாத இயக்கம் மிரட்டல் விடுத்துள்ளது.

இதனையடுத்து தமிழ்நாடு, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், ஹரியானா உத்தரப்பிரதேசம், குஜராத் ஆகிய 6 மாநிலங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் ரயில்நிலையங்கள், வழிபாட்டுத் தலங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் கூடுதல் கண்காணிப்பில் காவல்துறையுணர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ரயில் நிலையங்களுக்கு பவரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.புதியது பழையவை