வேளாங்கண்ணிக்கு இயங்கும் சிறப்பு ரயில்கள் குறித்த தகவல்06079 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில். (வழி - கோவை, திருச்சி)

எர்ணாகுளத்தில் இருந்து ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 5ம் தேதிகளில் இரவு 11:25க்கு புறப்பட்டு மறுநாள் பகல் 12:25க்கு வேளாங்கண்ணி வந்து சேரும். இந்த ரயில் தமிழகத்தில் கோயம்பத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

01032 வேளாங்கண்ணி - மும்பை லோகமானிய திலக் முனையம் சிறப்பு ரயில்.

வேளாங்கன்னியில் இருந்து ஆகஸ்ட் 28ம் தேதி பகல் 12மணிக்கு புறப்பட்டு மறுநாள்(ஆகஸ்ட் 29) இரவு 10:45க்கு மும்பை சென்றடையும். இந்த ரயில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா, குண்டக்கல், புனே வழியாக செல்லும்.

09042 வேளாங்கண்ணி - மும்பை பாந்த்ரா முனையம் சிறப்பு ரயில்.

வேளாங்கன்னியில் இருந்து ஆகஸ்ட் 29ம் தேதி இரவு 9:45க்கு புறப்பட்டு ஆகஸ்ட் 31ம் தேதி பகல் 12:05க்கு மும்பை சென்றடையும். இந்த ரயில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா, குண்டக்கல், புனே வழியாக செல்லும்.

06080 வேளாங்கண்ணி - எர்ணாகுளம் சிறப்பு ரயில். (வழி - திருச்சி, கோவை)

வேளாங்கன்னியில் இருந்து ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 6ம் தேதிகளில் மாலை 5:10க்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:30க்கு எர்ணாகுளம் சென்றடையும். இந்த ரயில் தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர், கோயம்பத்தூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

06091 நாகர்கோவில் - வேளாங்கன்னி சிறப்பு ரயில்.

நாகர்கோவிலில் இருந்து ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 7ம் தேதிகளில் பகல் 12:55க்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 2மணிக்கு வேளாங்கண்ணி வந்து சேரும். இந்த ரயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

06092 வேளாங்கண்ணி - நாகர்கோவில் சிறப்பு ரயில்.

வேளாங்கன்னியில் இருந்து செப்டம்பர் 1 மற்றும் 8ம் தேதிகளில் இரவு 10மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:45க்கு நாகர்கோவில் வந்து சேரும். இந்த ரயில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை மற்றும் வள்ளியூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

07060 செகந்திராபாத் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்.

செகந்திராபாத்தில் இருந்து செப்டம்பர் 5ம் தேதி காலை 8:30க்கு புறப்பட்டு, மறுநாள்(செப்டம்பர் 6) காலை 9:30க்கு வேளாங்கண்ணி வந்து சேரும். இந்த ரயில் வாரங்கல், விஜயவாடா, கூடூர், ரேணிகுண்டா, திருத்தணி, காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ரயில் நிலையங்கள் வழியாக செல்லும்.

07413 வேளாங்கண்ணி - காக்கிநாடா சிறப்பு ரயில்.

வேளாங்கண்ணியில் இருந்து செப்டம்பர் 6ம் தேதி மாலை 6:30க்கு புறப்பட்டு, மறுநாள்(செப்டம்பர் 7) மாலை 6மணிக்கு காக்கிநாடா சென்றடையும். இந்த ரயில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா, கூடூர், விஜயவாடா ரயில் நிலையங்கள் வழியாக செல்லும்.

07412 காக்கிநாடா - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்.

காக்கிநாடாவில் இருந்து செப்டம்பர் 8ம் தேதி பகல் 12:45க்கு புறப்பட்டு மறுநாள்(செப்டம்பர் 9) காலை 9:45க்கு வேளாங்கண்ணி வந்து சேரும். இந்த ரயில் வாரங்கல், விஜயவாடா, கூடூர், ரேணிகுண்டா, திருத்தணி, காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ரயில் நிலையங்கள் வழியாக செல்லும்.

06087 தாம்பரம் - வேளாங்கன்னி சிறப்பு ரயில்.

தாம்பரத்தில் இருந்து செப்டம்பர் 8ம் தேதி இரவு 7:20க்கு புறப்பட்டு மறுநாள்(செப் 9) அதிகாலை 3:30க்கு வேளாங்கண்ணி சென்றடையும். இந்த ரயில் செங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், திருப்பாதிரிப்புலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

06089 திருச்சி - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்

திருச்சியில் இருந்து செப்டம்பர் 8ம் தேதி மதியம் 1:30க்கு புறப்பட்டு அன்றைய தினம் மாலை 5:45க்கு வேளாங்கண்ணி சென்றடையும். இந்த ரயில் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

06040 0வேளாங்கண்ணி - மும்பை லோகமானிய திலக் முனையம் சிறப்பு ரயில்.

வேளாங்கன்னியில் இருந்து செப்டம்பர் 8ம் தேதி இரவு 9:45க்கு புறப்பட்டு செப்டம்பர் 10ம் தேதி பகல் 11:45க்கு மும்பை சென்றடையும். இந்த ரயில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா, குண்டக்கல், புனே வழியாக செல்லும்.

06042 வேளாங்கண்ணி - மும்பை லோகமானிய திலக் முனையம் சிறப்பு ரயில்.

வேளாங்கன்னியில் இருந்து செப்டம்பர் 9ம் தேதி காலை 8:30மணிக்கு புறப்பட்டு மறுநாள்(செப்டம்பர் 10) மாலை 6:30க்கு மும்பை சென்றடையும். இந்த ரயில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா, குண்டக்கல், புனே வழியாக செல்லும்.

07059 வேளாங்கண்ணி - செகந்திராபாத் சிறப்பு ரயில்.

வேளாங்கண்ணியில் இருந்து செப்டம்பர் 9ம் தேதி மாலை 6:30க்கு புறப்பட்டு மறுநாள்(செப்டம்பர் 10) இரவு 7:30க்கு செகந்திராபாத் சென்றடையும். இந்த ரயில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி, திருத்தணி, ரேணிகுண்டா, கூடூர், விஜயவாடா ரயில் நிலையங்கள் வழியாக செல்லும்.

07316 வேளாங்கண்ணி - கோவா சிறப்பு ரயில்.

வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 4, 8ம் தேதிகளில் இரவு 8:15க்கு புறப்பட்டு மறுநாள் இரவு 10:30க்கு வாஸ்கோ சென்றடையும். தமிழகத்தில் இந்த ரயில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். மேலும் இந்த ரயிலின் சில பெட்டிகள் வாஸ்கோவில் இருந்து ஸ்வந்த்வாடி ரோடு ரயில் நிலையம் செல்லும். 00108 கோவா – ஸ்வந்த்வாடி ரோடு சிறப்பு ரயில், கோவாவில் இருந்து இரவு 9:35க்கு புறப்பட்டு இரவு 11:55 ஸ்வந்த்வாடி ரோடு சென்றடையும்.

06085 திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்

திருவனந்தபுரத்தில் இருந்து ஆகஸ்ட் 28 மற்றும் செப்டம்பர் 4ம் தேதிகளில் இரவு 7:45க்கு புறப்பட்டு மறுநாள் காலை 10:05க்கு வேளாங்கண்ணி வந்து சேரும். இந்த ரயில் நாகர்கோவில் டவுன், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் வழியாக இயக்கம்.

06086 வேளாங்கண்ணி - திருவனந்தபுரம் சிறப்பு ரயில்

வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 5ம் தேதிகளில் இரவு 11:45க்கு புறப்பட்டு மறுநாள் பகல் 1:15க்கு திருவனந்தபுரம் சென்றடையும். இந்த ரயில் நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோயில் டவுன் வழியாக இயக்கம்.

06081 சென்னை எழும்பூர் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்

சென்னை எழும்பூரில் இருந்து ஆகஸ்ட் 28 மற்றும் செப்டம்பர் 4ம் தேதிகளில் இரவு 11:50க்கு புறப்பட்டு மறுநாள் காலை 8மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

06082 வேளாங்கண்ணி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்

வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 5ம் தேதிகளில் இரவு 5:20க்கு புறப்பட்டு மறுநாள் காலை 3:15க்கு எழும்பூர் வந்து சேரும்.

06083 சென்னை சென்ட்ரல் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்

சென்னை சென்ட்ரலில் இருந்து செப்டம்பர் 3ம் தேதி இரவு 8:10க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

06084 வேளாங்கண்ணி - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்

வேளாங்கண்ணியில் இருந்து செப்டம்பர் 4ம் தேதி மாலை 4:30க்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 3மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.