திருச்சி - சென்னை எழும்பூர் - திருச்சி இடையே சிறப்பு ரயில்.

82610 திருச்சி - சென்னை எழும்பூர் பன்மடங்கு கட்டண சிறப்பு ரயில்.

திருச்சியில் இருந்து ஆகஸ்ட் 18ம் தேதி இரவு 9:10க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 4மணிக்கு சென்னை எழும்பூர் வந்து சேரும்.

இந்த ரயில் ஸ்ரீரங்கம், லால்குடி, அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

06053 சென்னை எழும்பூர் - திருச்சி சிறப்பு ரயில்.

சென்னை எழும்பூரில் இருந்து ஆகஸ்ட் 19ம் தேதி பகல் 12மணிக்கு புறப்பட்டு, அன்று மாலை 6:15க்கு திருச்சி வந்து சேரும்

இந்த ரயில் மாம்பலம், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், லால்குடி மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
புதியது பழையவை