சென்னை எழும்பூர் ரயில் நிலையம் தென்னிந்தியாவில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.


ரயில்கள் இயக்கம், சிக்னல் மற்றும் தகவல் தொடர்பு , ரயில் நிலைய பராமரிப்பு, டிக்கெட் முன்பதிவு, பயணிகளுகான வசதிகள், பார்சல்களை கையாள்தல் ஆகியவற்றில் தென்னிந்தியாவில் எழும்பூர் ரயில் நிலையம் சிறந்து விளங்குவதாக சுற்றுச் சூழல் மேலாண்மை அமைப்பின் ஐஎஸ்ஓ தரச்சான்று (ISO 14001: 2015) விருது பெற்றுள்ளதாக தெற்கு ரயில்வே பொது மேலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்