திருச்செந்தூர் – பாலக்காடு – திருச்செந்தூர் பயணிகள் ரயில் சேவையில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் மாற்றம்.

பாலக்காட்டில் காலை 4:10க்கும், பொள்ளாச்சியில் காலை 6மணிக்கும் புறப்படும் 56769 பாலக்காடு – திருச்செந்தூர் பயணிகள் ரயில், ஆகஸ்ட் 31ம் தேதி வரை திண்டுக்கல் – திருநெல்வேலி இடையே ரத்து. (செவ்வாய் மற்றும் வியாழன் தவிர)

பாலக்காட்டில் காலை 4:10க்கும், பொள்ளாச்சியில் காலை 6மணிக்கும் புறப்படும் 56769 பாலக்காடு – திருச்செந்தூர் பயணிகள் ரயில், ஆகஸ்ட் 31ம் தேதி வரை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் மதுரை – திருநெல்வேலி இடையே ரத்து.

திருச்செந்தூரில் பகல் 11:40க்கு புறப்படும், 56770 திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில், ஆகஸ்ட் 31ம் தேதி வரை திருநெல்வேலி – திண்டுக்கல் இடையே ரத்து. (செவ்வாய் மற்றும் வியாழன் தவிர)

திருச்செந்தூரில் பகல் 11:40க்கு புறப்படும், 56770 திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில், ஆகஸ்ட் 31ம் தேதி வரை செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் திருநெல்வேலி – மதுரை இடையே ரத்து. மேலும் மதுரையில் இருந்து 1 மணிநேரம் 45 நிமிடம் தாமதமாக மாலை 6.45 மணிக்கு புறப்படும்.

மதுரையில் காலை 7:45க்கு புறப்படும், 56624 மதுரை – பழநி பயணிகள் ரயில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை ரத்து(ஆகஸ்ட் 12 மற்றும் 15ம் தேதி தவிர) செய்யப்படுகிறது. அதே சமயம் மதுரையிலிருந்து காலை 7.15 மணிக்கு பழனிக்கு ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயில் காலை 10.15 மணிக்கு பழநி சென்றடையும்.

தடத்தில் பராமரிப்பு மற்றும் பொறியியல் பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக மதுரை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.