திருச்சி வழியாக செல்லும் புதுச்சேரி - மங்களூர் ரயில் சேவையில் மாற்றம்.


புதுச்சேரியில் இருந்து ஆகஸ்ட் 17ம் தேதி மாலை 4:35க்கு புறப்படும், 16857 புதுச்சேரி - மங்களூர் விரைவு ரயில், விழுப்புரம், திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை தடத்திற்கு பதிலாக விழுப்புரம் - திருச்சி - திண்டுக்கல் - பொள்ளாச்சி - போத்தனுர் வழியாக செல்லலும்.

மங்களூரில் இருந்து ஆகஸ்ட் 18ம் தேதி மாலை 5:05க்கு புறப்படும், 16858 மங்களூர் - புதுச்சேரி விரைவு ரயில், கோயம்பத்தூர் - ஈரோடு - கரூர் - திருச்சி தடத்திற்கு பதிலாக போத்தனுர் - பொள்ளாச்சி - திண்டுக்கல் - திருச்சி வழியாக செல்லும்.

மேற்கொண்ட தகவலை சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை