தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்து :ஐ.ஐ.டி., பொறியாளர் குழு ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு ரயில் போக்குவரத்திற்கான வழித்தடம் குறித்து சென்னை ஐ.ஐ.டி., பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.
ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே 206 கோடி ரூபாயில் ரயில் போக்குவரத்து துவக்க மார்ச் 1 ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். மார்ச் 28 ல் ரயில்வே நிர்வாகம் தனுஷ்கோடி ரயில் பாதை வழித்தடத்தை ஆய்வு செய்தனர்.

ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே கடலோர பகுதி என்பதால் புதிய ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை தருமாறு சென்னை ஐ.ஐ.டி., கடல்சார் பொறியாளரிடம், தென்னக ரயில்வே நிர்வாகம் கேட்டது.

அதன்படி ஐ.ஐ.டி., பொறியாளர் பவித்ரன் தலைமையில் 4 பேர் குழு நேற்று தனுஷ்கோடி முகுந்தராயர் சத்திரத்தில், சேட்டிலைட் தொடர்பில் இயங்கும் 'ரியல் டைம் கைனமேடிக்' என்ற கருவி மூலம் கடல்நீர், தனுஷ்கோடி தேசிய சாலை மட்டம் குறித்து 5 கி.மீ.,க்கு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு மேலும் சில நாட்கள் நடக்கும் என பொறியாளர்கள் தெரிவித்தனர்.

செய்திகள் நன்றி - தினமலர்

புதியது பழையவை