திருப்பூரில் மீண்டும் ரயில் சேவை தொடக்கம்

திருப்பூர் செல்வதற்கான ரயில் சேவை, பராமரிப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் இயக்கப்பட்டதால், தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஈரோடு ரயில் நிலையத்தின் புதிய தொழில்நுட்பப் பணிகள் மற்றும் பராமரிப்புப் பணிகள், கடந்த 17ஆம் தேதி தொடங்கியது. இதன் காரணமாக ஈரோடு ரயில் நிலையம் வழியாக இயக்கப்படும் பல்வேறு ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. இதனால் கோவை, ஈரோடு பகுதிகளில் இருந்து, திருப்பூருக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், ஐந்து நாட்களுக்கு பிறகு, இன்று மீண்டும் ரயில் சேவை தொடங்கியுள்ளதால், தொழிலாளர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
புதியது பழையவை