திருச்சி – ராமேஸ்வரம் – திருச்சி பயணிகள் ரயில் சேவையில் ஆகஸ்ட் மாதம் முழுவதும் மாற்றம்.

திருச்சியில் இருந்து காலை 6:40க்கு புறப்படும், 56829 திருச்சி – ராமேஸ்வரம் பயணிகள் ரயில், ஆகஸ்ட் 6ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை(ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆகஸ்ட் 12ம் தேதி தவிர) மானாமதுரை – ராமேஸ்வரம் இடையே ரத்து. திருச்சி – மானாமதுரை இடையே மட்டும் இயங்கும்.

ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 1:55க்கு புறப்படும், 56830 ராமேஸ்வரம் – திருச்சி பயணிகள் ரயில், ஆகஸ்ட் 6ம் தேதி முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை(ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஆகஸ்ட் 12ம் தேதி தவிர) ராமேஸ்வரம் – மானாமதுரை இடையே ரத்து. மானாமதுரை – திருச்சி இடையே மட்டும் இயங்கும்.

தடத்தில் பராமரிப்பு மற்றும் பொறியியல் பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக மதுரை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

புதியது பழையவை