ஹைதராபாத் - ராமேஸ்வரம் - ஹைதராபாத் இடையே காட்பாடி, திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, மதுரை வழியாக ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வராந்திர சிறப்பு ரயில்.07685 ஹைதராபாத் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்.

ஹைதராபாத்தில் இருந்து ஆகஸ்ட் 23,20, செப்டம்பர் 6, 13, 20,27 மற்றும் அக்டோபர் 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் மதியம் 2:30க்கு புறப்பட்டு சனிக்கிழமை நள்ளிரவு 12:15க்கு(ஞாயிற்றுக்கிழமை) ராமேஸ்வரம் வந்து சேரும்.


07686 ராமேஸ்வரம் - ஹைதராபாத் சிறப்பு ரயில்.

ராமேஸ்வரத்தில் இருந்து ஆகஸ்ட் 25, செப்டெம்பர் 1, 8, 15, 22, 29 மற்றும் செப்டம்பர் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் அதிகாலை 5மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11மணிக்கு ஹைதராபாத் சென்றடையும்.


தமிழகத்தில் இந்த சிறப்பு ரயில்கள் காட்பாடி, வேலூர் கண்டோன்மெண்ட், திருவண்ணாமலை, விழுப்புரம், திருப்பதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.


இந்த ரயிலை அறிமுகப்படுத்தியதற்கு தஞ்சை மாவட்ட ரயில் பயணிகள் சங்கத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர். இந்த வராந்திர சிறப்பு ரயிலை நிரந்தர ரயிலாக இயக்க வேண்டும் என்பது ரயில் பயணிகளின் எதிர்பார்ப்பு.

புதியது பழையவை