நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணி மற்றும் சென்னைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு.


Image result for nagercoil06091 நாகர்கோவில் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்.

நாகர்கோவிலில் இருந்து ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 7ம் தேதிகளில் பகல் 12:55க்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

06092 வேளாங்கண்ணி - நாகர்கோவில் சிறப்பு ரயில்.

வேளாங்கண்ணியில் இருந்து செப்டம்பர் 1 மற்றும் 8ம் தேதிகளில் இரவு 10மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 10:45க்கு நாகர்கோவில் வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில்கள் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

முன்னதாக மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக, (06094/06093)நாகர்கோவில் - வேளாங்கண்ணி - நாகர்கோவில் இடையே அறிவிக்கப்பட்ட சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.

06006 நாகர்கோவில் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்.

நாகர்கோவிலில் இருந்து செப்டம்பர் 9ம் தேதி மாலை 5மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 5:30க்கு சென்னை எழும்பூர் வந்து சேரும். இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் மற்றும் மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

புதியது பழையவை