எர்ணாகுளம் - வேளாங்கண்ணி - எர்ணாகுளம் இடையே கோவை, ஈரோடு, கரூர், திருச்சி வழியாக சிறப்பு ரயில்

06079 எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்.

எர்ணாகுளத்தில் இருந்து ஆகஸ்ட் 29 மற்றும் செப்டம்பர் 5ம் தேதிகளில் இரவு 11:25க்கு புறப்பட்டு, மறுநாள் பகல் 12:25க்கு வேளாங்கண்ணி வந்து சேரும்.

06080 வேளாங்கண்ணி - எர்ணாகுளம் சிறப்பு ரயில்.

வேளாங்கண்ணியில் இருந்து ஆகஸ்ட் 30 மற்றும் செப்டம்பர் 6ம் தேதிகளில் மாலை 5:10க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8:30க்கு எர்ணாகுளம் சென்றடையும்.

தமிழகத்தில் இந்த சிறப்பு ரயில்கள் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த தகவலை தெற்கு ரயில்வே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.