நீலகிரி மலை ரயில் தடத்தில் புகைப்படம் எடுத்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் - தெற்கு ரயில்வே அதிரடி நடவடிக்கை


நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், நீலகிரி மலை ரயிலில் பயணிப்பதை விரும்புகின்றனர். சில நேரங்களில், ரயில் வரும் சமயங்களில் தண்டவாளங்களை கடந்து செல்வது, செல்பி புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

இதனை தடுக்க தற்போது தெற்கு ரயில்வே அபராதம் விதிக்கும் முறையை அறிவித்துள்ளது.

இது குறித்த தகவல் பின்வருமாறு


தண்டவாளங்களில் இருந்து புகைப்படம் மற்றும் செல்பி எடுத்தால் ரூ.2 ஆயிரம்.
ரயில் வரும் சமயங்களில் தண்டவாளங்களை கடந்து சென்றால் ரூ.1000.
டிக்கெட் இன்றி பிளாட்பார்களில் இருந்தால் ரூ.1000.
ரயில் நிலையங்கள் மற்றும் தண்டவாளங்களில் குப்பைகள் போட்டால் ரூ.200.
அசுத்தம் செய்தால் ரூ.300.


இது குறித்த நோட்டீஸ்களை உதகை, குன்னூர் மற்றும் கேத்தி போன்ற ரயில் நிலையங்களில் ஒட்டப்பட்டுள்ளது..