சென்னை சென்ட்ரல் - செகந்திராபாத் இடையே நெல்லூர், குண்டூர் வழியாக சிறப்பு ரயில் - தென் மத்திய ரயில்வே அறிவிப்பு


06059 சென்னை சென்ட்ரல் - செகந்திராபாத் சிறப்பு ரயில்

சேனை சென்ட்ரலில் இருந்து ஆகஸ்ட் 30, செப்டம்பர் 6, 13, 20 மற்றும் 27ம் தேதிகளில் இரவு 7:30க்கு புறப்பட்டு மறுநாள் காலை 8:25க்கு செகந்திராபாத் சென்றடையும்.

06060 செகந்திராபாத் - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்

செகந்திராபாத்தில் இருந்து செப்டம்பர் 1, 8, 15, 22 மற்றும் 29ம் தேதிகளில் இரவு 8மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்து சேரும்.


இந்த சிறப்பு ரயில்கள், சூலூர்பேட்டை, நாயுடுபேட்டை, கூடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, குண்டூர், பிடுகுரல்ல, மிரயால்கூட மற்றும் நலகுண்டா ரயில் நிலையங்களில் நின்று செல்லும்