காரைக்கால் - பேரளம் ரயில் பாதை பணி குறித்து அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனைகாரைக்கால் மாவட்டத்தில் சனீஸ்வர பகவான் கோவில், அம்மையார் கோவிலுக்கும், அருகில் உள்ள நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட ஆலயங்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமானோர் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு, காரைக்கால் - பேரளம் இடையே மீண்டும் ரயில் சேவையை துவக்க வென்றும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், காரைக்கால் - பேரளம் ரயில் அகலப்பாதை பணிகள் குறித்து, நேற்று மாவட்ட ஆட்சியர் விக்ரந்தராஜா, பொதுப்பணித்துறை அதிகாரி சுரேஷ் மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

பின்னர் ஆட்சியர் கூறுகையில், 'காரைக்கால் - பேரளம் ரயில் பாதை, கடந்த 1980ம் ஆண்டு மூடப்பட்டது. இப்போது, காரைக்கால் வளர்ச்சியை கருத்தில்கொண்டு, இந்த மார்க்கத்தில் அகல ரயில் பாதை திட்டப்பணி, தெற்கு ரயில்வே மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து மேற்கொள்ளப்படும்' துன்று கூறினார்.


1970ம் ஆண்டு அட்டவணை / காரைக்கால் - பேரளம்  


இந்த ஆய்வுக்கு பிறகு, ஆட்சியர் அலுவலகத்தில், அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திருச்சி ரயில்வே கட்டுமானப்பிரிவு அதிகாரி சரவணன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இதனிடையே காரைக்கால் - பேரளம் இடையே 23 கிலோமீட்டர் பாதையை வருகின்ற 2020ம் ஆண்டிற்குள் போக்குவரத்திற்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


புதியது பழையவை