முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்.

வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5:10க்கு புறப்படும், 56010 வேலூர் அரக்கோணம் பயணிகள் ரயில்ஆகஸ்ட் 31ம் தேதி முழுமையாக ரத்து.

அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 1:05க்கு புறப்படும், 56013 அரக்கோணம் வேலூர் கண்டோன்மெண்ட் பயணிகள் ரயில்ஆகஸ்ட் 31ம் தேதி முழுமையாக ரத்து.

பகுதி தூரம் மட்டும் செல்லும் ரயில்கள்.

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 1:30க்கு புறப்படும், 56122 ஜோலார்பேட்டை அரக்கோணம் பயணிகள் ரயில்ஆகஸ்ட் 31ம் தேதி ஜோலார்பேட்டை லத்தேரி இடையே மட்டும் இயங்கும்லத்தேரி அரக்கோணம் இடையே ரத்து.

சிறப்பு பயணிகள் ரயில்.


லத்தேரி ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6:10க்கு அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு ஆகஸ்ட் 31ம் தேதி சிறப்பு ரயில்.

நிறுத்தி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்.

12578 மைசூர் தார்பங்கா 'பாக்மதிஅதிவிரைவு ரயில்ஆகஸ்ட் 31ம் தேதி காட்பாடி ரயில் நிலையத்தில் சுமார் 115 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

56122 ஜோலார்பேட்டை அரக்கோணம் பயணிகள் ரயில்ஆகஸ்ட் 31ம் தேதி லத்தேரி ரயில் நிலையத்தில் சுமார் 15 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

22637 சென்னை சென்ட்ரல் மங்களூர் 'வெஸ்ட் கோஸ்ட்அதிவிரைவு ரயில்ஆகஸ்ட் 31ம் தேதி செவ்வூர் ரயில் நிலையத்தில் சுமார் 115 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்படும்.

22606 விழுப்புரம் புருலியா அதிவிரைவு ரயில்ஆகஸ்ட் 31ம் தேதி காட்பாடி ரயில் நிலையத்தில் சுமார் 60 நிமிடங்கள் நிறுத்தி தாமதமாக இயக்கப்டுடம்.

மேற்கொண்ட தகவலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.