76808 மானாமதுரை – திருச்சி பயணிகள் ரயில், ஆகஸ்ட் 30ம் தேதி வரை மானாமதுரையில் இருந்து மதியம் 2 மணிக்கு பதிலாக மதியம் 2.30 மணிக்கு புறப்படும். (சனி, ஞாயிறு, திங்கட்கிழமை தவிர)

76807 திருச்சி – மானாமதுரை பயணிகள் ரயில் ஆகஸ்ட் 30ம் தேதி வரை திருச்சியிலிருந்து காலை 10.05க்கு பதிலாக காலை 11.05 மணிக்கு புறப்படும். (சனி, ஞாயிறு, திங்கட்கிழமை தவிர) இதனால் மானாமதுரையில் மதுரை – ராமேஸ்வரம் ரயிலுக்கு இணைப்பு கிடையாது.

மேலும் ஆகஸ்ட் 17, 18, 24, 25 மற்றும் 31 ஆகிய தேதிகளில் 76807 மற்றும் 76808 ரயில்கள் முழுமையக ரத்து செய்யப்படுகிறது.

தடத்தில் பராமரிப்பு மற்றும் பொறியியல் பணி காரணமாக ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக மதுரை ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.