விழுப்புரம் - திருச்சி தடத்தில் பராமரிப்பு மற்றும் பொறியியல் பணி காரணமாக ஆகஸ்ட் 29ம் தேதி ரயில் சேவையில் மாற்றம்.


விருத்தாசலத்தில் இருந்து காலை 6மணிக்கு புறப்படும், 76845 விருத்தாசலம் - திருச்சி பயணிகள் ரயில், சில்லக்குடி ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும். சில்லக்குடி - திருச்சி இடையே ரத்து.

திருப்பாதிரிபுலிரில் இருந்து காலை 6மணிக்கு புறப்படும், 76841 திருப்பாதிரிப்புலியூர் - திருச்சி பயணிகள் ரயில், அரியலூர் ரயில் நிலையம் வரை மட்டுமே செல்லும். அரியலூர் - திருச்சி இடையே ரத்து.

16352 நாகர்கோவில் - மும்பை விரைவு ரயில், சில்லக்குடி - அரியலூர் ரயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 40 நிமிடங்கள் நிறுத்தி இயக்கப்படும். இதன் காரணமாக இந்த ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு 45 நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும்.

16128 குருவாயூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில், விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு சுமார் 60 நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும்.

12653 சென்னை எழும்பூர் - திருச்சி அதிவிரைவு ரயில், திருச்சி ரயில் நிலையத்திற்கு சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும்.

22631 மதுரை - பிகானீர் குளிர்சாதன அதிவிரைவு ரயில், திருச்சி நிலையத்திற்கு சுமார் 20 நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும்.

திருச்சியில் இருந்து மாலை 3:40க்கு புறப்படும், 76842 திருச்சி - திருப்பாதிரிப்புலியூர் பயணிகள் ரயில், 40 நிமிடங்கள் தாமதமாக மாலை 4:20க்கு திருச்சியில் இருந்து புறப்படும்.

மேற்கொண்ட தகவலை திருச்சி ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை