காட்பாடி ரயில் நிலையத்தில் பொறியியல் மற்றும் பராமரிப்பு பணி காரணமாக ஆகஸ்ட் 28, 29 மற்றும் 31ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம்.


முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்.

வேலூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 5:10க்கு புறப்படும், 56010 வேலூர் - அரக்கோணம் பயணிகள் ரயில், ஆகஸ்ட் 28, 29 மற்றும் 31ம் தேதிகளில் முழுமையாக ரத்து.

அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 1:05க்கு புறப்படும், 56013 அரக்கோணம் - வேலூர் கண்டோன்மெண்ட் பயணிகள் ரயில், ஆகஸ்ட் 28, 29, மற்றும் 31ம் தேதிகளில் முழுமையாக ரத்து.

பகுதி தூரம் மட்டும் செல்லும் ரயில்கள்.

ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 1:30க்கு புறப்படும், 56122 ஜோலார்பேட்டை - அரக்கோணம் பயணிகள் ரயில், ஆகஸ்ட் 28, 29 மற்றும் 31ம் தேதிகளில் ஜோலார்பேட்டை - லத்தேரி இடையே மட்டும் இயங்கும். லத்தேரி - அரக்கோணம் இடையே ரத்து.

சிறப்பு பயணிகள் ரயில்.

லத்தேரி ரயில் நிலையத்தில் இருந்து மாலை 6:10க்கு அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு ஆகஸ்ட் 28, 29 மற்றும் 31ம் தேதிகளில் சிறப்பு ரயில்.

மேற்கொண்ட தகவலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.