மத்திய ரயில்வேக்கு உள்பட்ட சோலாப்பூர் - வாடி தடத்தில் பொறியியல் பணி காரணமாக தமிழக்தில் இருந்து மும்பை செல்லும் ரயில் சேவைகளில் ஆகஸ்ட் 26ம் தேதி வரை மாற்றம்.


முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில்கள்11013 மும்பை குர்லா - கோயம்பத்தூர் விரைவு ரயில் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் ஆகஸ்ட் 23ம் தேதி வரை ரத்து.
11014 கோயம்பத்தூர் - மும்பை குர்லா விரைவு ரயில் ஆகஸ்ட் 20ம் தேதி முதல் ஆகஸ்ட் 25ம் தேதி வரை ரத்து.
11017 மும்பை லோகமானிய திலக் முனையம் - காரைக்கால் வாராந்திர விரைவு ரயில் ஆகஸ்ட் 17ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 24ம் தேதி வரை ரத்து.
11018 காரைக்கால் - மும்பை லோகமானிய திலக் முனையம் வாராந்திர விரைவு ரயில் ஆகஸ்ட் 19ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 26ம் தேதி வரை ரத்து.
11043 மும்பை லோகமானிய திலக் முனையம் - மதுரை வாராந்திர விரைவு ரயில் ஆகஸ்ட் 16ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 23ம் தேதி வரை ரத்து.
11044 மதுரை - மும்பை லோகமானிய திலக் முனையம் வாராந்திர விரைவு ரயில் ஆகஸ்ட் 17ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 24ம் தேதி வரை ரத்து.
19420 அகமதாபாத் - சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் ஆகஸ்ட் 17ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை ரத்து.
19419 சென்னை சென்ட்ரல் - அகமதாபாத் விரைவு ரயில் ஆகஸ்ட் 18ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 22ம் தேதி வரை ரத்து.
22601 சென்னை சென்ட்ரல் - சாய் நகர் ஷிரிடி வாராந்திர விரைவு ரயில் ஆகஸ்ட் 21ம் தேதி ரத்து.
22602 சாய் நகர் ஷிரிடி - சென்னை சென்ட்ரல் வாராந்திர விரைவு ரயில் ஆகஸ்ட் 23ம் தேதி ரத்து.
12163 மும்பை தாதர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் ஆகஸ்ட் 22ம் தேதி வரை ரத்து.
12164 சென்னை எழும்பூர் - மும்பை தாதர் விரைவு ரயில் ஆகஸ்ட் 17ம் தேதி முதல் ஆகஸ்ட் 24ம் தேதி வரை ரத்து.
22920 அகமதாபாத் - சென்னை சென்ட்ரல் ஹம்சபார் விரைவு ரயில் ஆகஸ்ட் 19ம் தேதி ரத்து.
22919 சென்னை சென்ட்ரல் - அகமதாபாத் ஹம்சபார் விரைவு ரயில் ஆகஸ்ட் 21ம் தேதி ரத்து.மாற்றுப்பாதையில் இயங்கும் ரயில்களின் விவரம்


16340 நாகர்கோவில் - மும்பை சத்திரபதி சிவாஜி முனையம் விரைவு ரயில், ஆகஸ்ட் 16, 19, 20, 21 மற்றும் 23ம் தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும் சேவைகள், மதுரை - திண்டுக்கல் - பழனி - பாலக்காடு - சோரனுர் - கோவா வழியாக செல்லும். இந்த ரயில் கரூர், ஈரோடு, சேலம், திருப்பத்தூர் வழியாக செல்லாது.

16339 மும்பை சத்திரபதி சிவாஜி முனையம் - நாகர்கோவில் விரைவு ரயில், ஆகஸ்ட் 16, 18, 21, 22, மற்றும் 23ம் தேதிகளில் மும்பையில் இருந்து புறப்படும் சேவை கோவா - மங்களூர் - சோரனுர் - பாலக்காடு - பழனி - திண்டுக்கல் - மதுரை வழியாக செல்லும். ஈந்த ரயில் திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கரூர் வழியாக செல்லாது.

16332 திருவனந்தபுரம் - மும்பை சத்திரபதி சிவாஜி முனையம் வாராந்திர விரைவு ரயில், ஆகஸ்ட் 17ம் தேதி புறப்படும் சேவை, எர்ணாகுளம் - சோரனுர் - கோவா வழியாக செல்லும். இந்த ரயில் கோயம்பத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், திருப்பத்தூர் வழியாக செல்லாது.

16331 மும்பை சத்திரபதி சிவாஜி முனையம் - திருவனந்தபுரம் வாராந்திர விரைவு ரயில், ஆகஸ்ட் 19ம் தேதி மும்பையில் புறப்படும் சேவை கோவா - மங்களூர் - சோரனுர் - எர்ணாகுளம் வழியாக செல்லும். இந்த ரயில் திருப்பத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்பத்தூர் வழியாக செல்லாது.புதியது பழையவை