அரக்கோணம் - ரேணிகுண்டா தடத்தில் பராமரிப்பு பணி: ஆகஸ்ட் 25, 26ம் தேதிகளில் ரயில் சேவையில் மாற்றம்


தாமதமாக செல்லும் ரயில்கள்.

சென்னை சென்ட்ரல் - மும்பை சிஎஸ்எம்டி-க்கு ஆகஸ்ட் 25ம் தேதி இயக்கப்படும் ரயில் புத்தூர்-பூடி இடையே நின்று செல்லும் என்பதால், ரேணிகுண்டாவிற்கு சுமார் 100 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்.

சென்னை சென்ட்ரல் - கேஎஸ்ஆர் பெங்களூருக்கு ஆகஸ்ட் 26ம் தேதி இயக்கப்படும் ரயில், அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும். 

சென்னை சென்ட்ரல் - மும்பை சிஎஸ்டிஎம்க்கு ஆகஸ்ட் 26ம் தேதி இயக்கப்படும்  ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு சுமார் 30 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும். 

பகுதியாக ரத்து செய்யப்படும் ரயில்கள்.

சென்னை மூர்மார்க்கெட் - அரக்கோணத்துக்கு ஆகஸ்ட் 25ம் தேதி  இயக்கப்படும்  43439 மற்றும் 66009 ரயில்கள் திருவள்ளூரில் நிறுத்தப்படும். பின்னர் திருவள்ளூரில் இருந்து சிறப்பு பயணிகள் ரயில்களாக ஆகஸ்ட் 26ம் தேதி 12:50 மற்றும் 12:55க்கு இயக்கப்படும்.


புதியது பழையவை