சேலம் ரயில்வே கோட்டம், 2018 - 19ம் நிதியாண்டில், 303.48 கோடி ரூபாய் கட்டணம் வசூலித்து அசத்தியுள்ளது.


சேலம் ரயில்வே கோட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உட்பட, 94 ஸ்டேஷன்கள் உள்ளன. பயணிகள் வசதிக்காக பல்வேறு கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திவரும் ரயில்வே நிர்வாகம், டிக்கெட் எடுக்காமல் பயணிப்பது போன்று வருவாய் இழப்பை ஏற்படுத்துவோர் மீதும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, டிக்கெட் பரிசோதனையில், 2018 - 19ம் நிதியாண்டில், 4.75 கோடி ரூபாய் பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்பட்டுள்ளது. 2017 - 18ம் நிதியாண்டில், 3.20 கோடி ரூபாய் டிக்கெட் பரிசோதனையில் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், சரக்கு கட்டணமாக, 2018 - 19ம் நிதியாண்டில், ரூ.23.60 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. பயணிகளிடம் இருந்து, 197 கோடி ரூபாய் உட்பட, 2018 - 19ம் நிதியாண்டில், 303.48 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக, சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
புதியது பழையவை