சென்னை - கூடூர் தடத்தில் செப்டம்பர் 2ம் தேதி வரை புறநகர் சேவையில் மாற்றம்

பகுதியாக ரத்து செய்யப்படும் புறநகர் சேவைகள்

சென்னை மூர்மார்கெட்டில் காலை 7:30க்கு புறப்படும், 42407 சென்னை மூர் மார்க்கெட் - சூலூர்பேட்டை மின்தொடர் பயணிகள் ரயில் ஆகஸ்ட் 19, 20, 21, 22, 24, 25, 26, 27, 28, 29, 31 மற்றும் செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் எளாவூர் - சூலூர்பேட்டை இடையே ரத்து. இந்த ரயில் மூர் மார்க்கெட் - எளாவூர் இடையே மட்டும் இயங்கும்.

சூலூர்பேட்டையில் இருந்து காலை 10மணிக்கு புறப்படும், 42408 சூலூர்பேட்டை - சென்னை மூர் மார்க்கெட் மின்தொடர் பயணிகள் ரயில் ஆகஸ்ட் 19, 20, 21, 22, 24, 25, 26, 27, 28, 29, 31 மற்றும் செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் சூலூர்பேட்டை - எளாவூர் இடையே ரத்து. இந்த ரயில் எளாவூர் - சென்னை மூர் மார்க்கெட் இடையே மட்டும் இயங்கும்.
புதியது பழையவை