சென்னை கடற்கரை - தாம்பரம்/செங்கல்பட்டு தடம்

ரயில்கள் ரத்து.

சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே காலை 10:30 முதல் மதியம் 2:30 வரை அனைத்து புறநகர் ரயில்களும் ரத்து.
தாம்பரம் - கடற்கரை இடையே காலை 10:45 முதல் மாலை 3:10 வரை அனைத்து புறநகர் ரயில்களும் ரத்து.

பகுதியாக ரயில்கள் ரத்து.

சென்னை கடற்கரையில் இருந்து காலை 11:00, 11:50, 12:30, 1:00, 1:45, 2:15, 2:45 ஆகிய நேரங்களில் செங்கல்பட்டிருக்கு புறப்படும் மின்தொடர் ரயில்கள் தாம்பரத்தில் இருந்து வழக்கம் போல இயங்கும்.

மேலும் சென்னை கடற்கரையில் இருந்து 12:50க்கு அரக்கோணம் செல்லும் மின்தொடர் ரயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும். (சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே ரத்து)

காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9:15, செங்கல்பட்டில் இருந்து காலை 10:55, 11:30, 12:20, 1:00, 1:50 மற்றும் திருமால்பூரில் இருந்து காலை 10:30க்கு புறப்படும் மின்தொடர் ரயில்கள் தாம்பரம் வரை மட்டுமே செல்லும்.

சிறப்பு மின்தொடர் ரயில்கள்

தாம்பரத்தில் இருந்து 11:00, 11:45, 12:10, 1:05, 1:20, 2:05, 2:40க்கு சென்னை கடற்கரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்.

சென்னை கடற்கரையில் இருந்து காலை 11:10, 11:30, 11:45, 12:15, 12:55, 1:35, 2:00, 2:35க்கு தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள்.

சென்னை கடற்கரை - வேளச்சேரி தடம்

சென்னை கடற்கரை - வேளச்சேரி தடத்தில் காலை 7:50 முதல் மதியம் 2மணி வரை அனைத்து புறநகர் ரயில் சேவைகளும் ரத்து.

வேளச்சேரி - சென்னை கடற்கரை தடத்தில் காலை 8மணி முதல் மதியம் 2:!0 வரை அனைத்து புறநகர் சேவைகளும் ரத்து.

மேற்கொண்ட தகவல்களை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.