நாகர்கோவில் - தாம்பரம் - நாகர்கோவில் இடையே ஆகஸ்ட் 18 மற்றும் 19ம் தேதிகளில் சிறப்பு ரயில்

06831 நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு ரயில்.

நாகர்கோவிலில் இருந்து ஆகஸ்ட் 18ம் தேதி மாலை 5மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6:30க்கு தாம்பரம் வந்து சேரும்.

இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, திருப்பதிரிபுலியூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

06382 தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு ரயில்.

தாம்பரத்தில் இருந்து ஆகஸ்ட் 19ம் தேதி காலை 10:40க்கு புறப்பட்டு அன்று இரவு 12:45க்கு நாகர்கோவில் சென்றடையும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி மற்றும் வள்ளியூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.