தமிழகத்தில் இருந்து மும்பை செல்லும் ரயில் சேவையில் ஆகஸ்ட் 16ம் தேதி வரை மாற்றம்.

11006 புதுச்சேரி - மும்பை தாதர் விரைவு ரயில், ஆகஸ்ட் 11, 13 மற்றும் 14ம் தேதிகளில் புதுச்சேரியில் புறப்படும் சேவை புனே வரை மட்டுமே செல்லும்.

11022 திருநெல்வேலி - தாதர் விரைவு ரயில், ஆகஸ்ட் 12, 15 மற்றும் 16ம் தேதிகளில் நெல்லையில் புறப்படும் சேவை புனே வரை மட்டுமே செல்லும்.

11021 தாதர் - திருநெல்வேலி விரைவு ரயில், ஆகஸ்ட் 13 மற்றும் 14ம் தேதிகளில் மும்பையில் புறப்படும் சேவை புனேயில் இருந்து புறப்படும்.

11005 தாதர் - புதுச்சேரி விரைவு ரயில், ஆகஸ்ட் 12 மற்றும் 16ம் தேதிகளில் மும்பையில் புறப்படும் சேவை புனேவில் இருந்து புறப்படும்.

11014 கோயம்புத்தூர் - மும்பை விரைவு ரயில், ஆகஸ்ட்11, 12, 13, 14 மற்றும 15ம் தேதிகளில் கோவையில் புறப்படும் சேவை புனே வரை மட்டுமே செல்லும்.

11013 மும்பை - கோயம்புத்தூர் விரைவு ரயில், ஆகஸ்ட் 12, 13, 14, 15 மற்றும் 16ம் தேதிகளில் மும்பையில் புறப்படும் சேவை புனேவில் இருந்து புறப்படும்.

புதியது பழையவை